அரவிந்த்சாமி – அமலாபால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் கதை!

நாயகன் பாஸ்கர் பெரிய தொழிலதிபர். மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் ஆதி. பள்ளியில் படிக்கிறான். அவனுடைய பள்ளித் தோழி ஷிவானி. அவளுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அம்மா பெயர் ஹிமா. சிறுவன் ஆதியும், சிறுமி ஷிவானியும் சகோதரன் – சகோதரியாக, ஒரே குடும்பமாய் வாழ ஆசைப்படுகிறார்கள். இதற்காக பாஸ்கருக்கும், ஹிமாவுக்கும் மறுமணம் செய்துவைக்க விரும்புகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனைகளும், திருப்பங்களும் தான் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும்  வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற மலையாளப் படத்தின் கதை.

0a1e

இந்த படத்தை இதன் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். மம்முட்டி நடித்த பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும், நயன்தாரா நடித்த ஹிமா என்ற கதாபாத்திரத்தில் அமலாபாலும்  நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ்   பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.  டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0a1f

Read previous post:
0a1d
தமிழ் மாணவர்கள் மீது ஆங்கிலத்தை திணித்தால் ஏற்படும் சீர்கேடுகளை சொல்லும் ‘பாடம்’!

நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால்  பலிவாங்கப்பட்ட  ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், இது போன்ற ஒரு கல்வி முறை

Close