“பள்ளிப் பருவத்தில் காதலிப்பது தவறு” என சொல்லும் படம் ‘உறுதி கொள்’!

ஏபிகே பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘உறுதி கொள்’. இந்த படத்தில் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.அய்யனார். இவர் இயக்குனர் கிருஷ்ணாவிடம் ‘நெடுஞ்சாலை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர். ‘உறுதி கொள்’ படம் பற்றி இவர் கூறுகையில், “பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகள் இடையே உருவாகும் காதல் தவறானது.. சரியான புரிதலும், பக்குவமும் இல்லாத வயதில் ஏற்படும் காதல், பருவ மாற்றம் ஏற்படுகிற காலகட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சி தானே தவிர அது காதல் இல்லை.

“காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் காதலி போகக் கூடாது. அப்படிப் போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தான் படத்தின் கதை. இப்படம் பார்க்கிற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள்.

“இதை காதல், மோதல், செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம். விரைவில் படம் வெளியாக உள்ளது” என்றார் இயக்குனர் ஆர்.அய்யனார்.

ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம்

இசை – ஜூட் வினிகர்

எடிட்டிங் – எம்.ஜேபி

பாடல்கள் – மணிஅமுதன்

ஸ்டண்ட் – டேஞ்சர் மணி

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எஸ்.ஸ்ரீதர்

தயாரிப்பு – பி.அய்யப்பன், சி.பழனி

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி

Read previous post:
u8
Uruthi kol Movie Photo Gallery

Uruthi kol Movie Photos

Close