மராட்டிய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே

மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்குப்பின் சிவசேனா கட்சி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆனார்.

ஆளும் கூட்டணியைவிட்டு விலகி பாஜகவுடன் கூட்டு அமைக்க வேண்டும் என்று கோரி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சுமார் 38 பேர் போர்க்கொடி தூக்கியதை அடுத்து ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.

இதனையடுத்து உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியையும், மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

சிவசேனை கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.

Read previous post:
0a1b
’பனாரஸ்’ படத்தின் “மாய கங்கா…” பாடல் – வீடியோ

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக

Close