பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்: வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் அடைந்தார். வீட்டில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டு உயிரிழந்தாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான ’தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தில் இடம் பெற்ற “மல்லிகை என் மன்னன் மயங்கும்…” என்ற பாடல் மூலம் பிரபலம் ஆனார்.

 தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது அ றிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் வாணி ஜெயராம் தவறி விழுந்து, தலையில் அடிபட்டு உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இவருடைய திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.