ஜப்பான் திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘இறுதிச்சுற்று’!
மாதவன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘இறுதிச்சுற்று’. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் அறிமுக நாயகியாக நடித்திருந்தார். சுதா கொங்கரா பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதது படக்குழுவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது. இந்த திரைப்பட விழாவில் இப்படம் விரைவில் திரையிடப்படவுள்ளது. இதற்காக படக்குழுவினர் விரைவில் டோக்கியோ பயணப்பட உள்ளனர்.