சசிகலாவுடன் திருமாவளவன் சந்திப்பு!

அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக இன்று (சனிக்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் வி.கே.சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார்.

பின்னர் பொதுச்செயலாளர் அறைக்குச் சென்று அங்கு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உடன் இருந்தார்.

Read previous post:
0a1a
மோடியை தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது பத்தே பத்து அடிகள் தான்…!

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக்

Close