ஒரு பேராசைக்காரனுடன் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் கதை ‘தகடு’
ராகதேவி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்கும் படம் ‘தகடு’. இந்த படத்தில் பிரபா அஜய் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, அவன் இவன் ராமராஜன், ஆர்.தீபக்ராஜ், மிப்பு, ராம்கிரண், பிரியங்கா சுக்லா, ஹாசிகா, ஆயிஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.தங்கதுரை. இப்படம் பற்றி இயக்குனர் எம்.தங்கதுரை கூறுகையில், “தனது பேராசையால் உலகையே அடைய நினைத்த பல மன்னர்களின் கதை உண்டு. ஆனால் பேராசை கொண்ட மன்னர்கள் தான் மண்ணோடு மண்ணாக போனார்களேயொழிய, இன்றுவரை அந்த பேராசை என்னும் பெரும் பேய் ஏதோ ஒரு வடிவில் அழியாமல் உலவிக்கொண்டு தான் இருக்கிறது. அப்படி பேராசை கொண்ட ஒருவனோடு பயணிக்கும் கல்லூரி மாணவர்களின் ஒரு அசாத்தியமான பயணம் தான் இந்த ‘தகடு’.
“கல்லூரியில் வரலாறு பாடம் படிக்கும் நாயகன் மற்றும் அவனது நண்பர்கள் சிலர், பாடத்தில் வரும் ஒரு வரலாறு சம்பந்தப்பட்ட இடத்தைத் தேடிப் போகிறார்கள். அப்போது அவர்கள் தேடிப் போனது இல்லமால், முக்கியமான ஒன்றை பார்கிறார்கள். அது என்ன? அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பது தான் படத்தின் திரைக்கதை.
“இந்த படத்திற்காக ஆந்திராவில் உள்ள கங்குந்திகோட்டை என்ற கோட்டையில் முதன்முறையாக படிப்பிடிப்பு நடத்தினோம். அங்கு யாரும் இதுவரை படிப்பிடிப்பு நடத்தியது கிடையாது. அந்த இடத்திற்குப் போக வேண்டும் என்றால் காரில் போக முடியாது. கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் நடந்துதான் செல்லவேண்டும் அப்படி கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம் மேலும் கிருஷ்ணகிரி, ஒக்கேனக்கல், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது” என்றார் இயக்குனர்.
ஒளிப்பதிவு – எஸ்.கார்த்திகேயன்
இசை – சார்லஸ் மெல்வின்.எம்
பாடல்கள் – இளைய கம்பன்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கலை – வி.சிவகுமார்
ஸ்டன்ட் – சூப்பர்குட் ஜீவா
நடனம் – அஜய் சிவசங்கர், ராக் சங்கர்
ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி