இந்தியாவில் ஒரு சுடுகாடு! அதன் பெயர் தமிழ்நாடு!!

கெயில் (GAIL) என்பது இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு அற்புதமான திட்டம். ஆனால் பொருளாதாரம் உயர்ந்த இந்தியாவில் கடைக்கோடியில் ஒரு சுடுகாடு இருக்கும். அதன் பெயர் தமிழ்நாடு.

வருடத்திற்கு கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தரும் ஒரு திட்டம், கேரள அரசின் கனவுத் திட்டம் என்றுதான் இதை சொல்ல வேண்டும். ஆனால் அதுல பாருங்க, நம்ம தமிழ்நாட்டுக்கு அதனால் என்ன கிடைக்கும் என்றால், சிறந்த முறையில் தயார் செய்யப்பட்ட அல்வாதான்.

திட்டத்தை பற்றி எல்லாம் நம்ம அரசாங்கம் தெளிவாக எடுத்துச் சொல்லும். அரசாங்கம் சொல்ல பயப்படும் விஷயத்தை நான் சொல்றேன்.

போன வருடம் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனத்தின் கவனக் குறைவினால் நடந்த ஒரு சின்ன விபத்து, “நகரம்” என்ற கிராமமே உருக்குலைந்து போனது. கொஞ்சப் பேர் உயிர் போச்சு… அவ்வளவுதான். செத்தவங்க எல்லாம் அன்னாடங்காச்சி என்று சொல்லகூடிய விவசாயிகள் தான்.

சின்ன விபத்துதான் இது..!

அதேபோல அந்த குழாய்கள் தமிழ்நாட்டில்,

கோயம்புத்தூர் – 15 கிராமங்கள்
திருப்பூர் – 22 கிராமங்கள்
ஈரோடு – 11 கிராமங்கள்
நாமக்கல் – 9 கிராமங்கள்
சேலம் – 29 கிராமங்கள்
தர்மபுரி – 27 கிராமங்கள்
கிருஷ்ணகிரி – 18 கிராமங்கள்

வழியாக பதிக்கப்படும்.

கெயில் நிறுவனம் பதிக்கப்போகும் Oil Pipe Line மொத்த நீளம் 547 கிமீ.

சாதாரணமாக 100 மீ. தூரத்திற்கு நீங்கள் பக்கவாட்டு திசையில் (Horizontal) குழாய் மூலம் திரவத்தை அனுப்ப 3 Bar Pressure தேவை.

அதாவது 3 Bar = 3 Kg/Cm~2

1 Bar என்பது 10 மீ. (32 அடி).

உயர மாடியிலிருந்து ஓர் பொருளை கீழ்நோக்கிப் போட்டால் என்ன வேகத்தில் தரையைத் தொடுமோ அந்த விசை தான் 1 Bar, அல்லது 1 Kg/cm`2

Basement Sump (நீர்தேக்க தொட்டி)யில் இருந்து மொட்டை மாடிக்கு Over Head Tank க்கு நீரை அனுப்ப நாங்கள் Pump Design செய்யும்போது கீழ்க்கண்டவாறு கணக்கு எடுத்து கொள்ளுவோம்.

Vertical Pipe lineக்கு 1 மீ.க்கு 1 Bar தேவை.

இங்கே,
ஒரே நேர்கோட்டிலோ அல்லது முழுவதும் படுக்கை வாக்கிலோ Pipe Line ஐ கொண்டு செல்லும்போது இந்த கணக்கீடில் 6ல் 1 பங்கு எடுத்துக்கொண்டால் போதும். காரணம், இந்த Bar Pressure என்பது Vertical மேல் நோக்கிய விசையில் நீரை செலுத்த நாங்கள் பயன்படுத்தும் சூத்திரம்.

So,

547 / 6 = 91.1
91.1~ 92 Round off
ஆக 92 மீ. Vertical Pressure கொடுத்தால் போதும்.1 Bar Vertical Pressure வானத்தை நோக்கி 1 m உயரத்தில் செல்லும்.
அப்படி எனில் 90 மீ சராசரியாக மேலே செல்லும், அதே பக்கவாட்டில் 90*3 = 270 Meter தூரத்திற்க்கு திரவத்தை பீய்ச்சி அடிக்கும்.

உதாரணம் :- உங்கள் நிலத்தின் கீழே பதிக்கப்பட்ட குழாயில் சிறு துளை ஏற்பட்டாலும் 270 மீ அல்லது 880 அடி தூரத்திற்க்கு Oil ஐ உங்கள் வயலில் பீய்ச்சி அடிக்கும்.

அதன்பின் விவசாயம் என்பதையே நீங்கள் மறந்துவிட வேண்டியது தான் !
இவர்கள் இப்போது எடுத்து இருக்கும் கணக்கு, அல்லது அரசின் அறிவுரைபடி தங்கள் படிவத்தில் 90- 92 Bar Pressure என எழுதி கொடுத்து இருப்பார்கள்.
ஆனால் Field ல் Oil ஐ அனுப்பும்போது 6 ல் ஒரு பங்கு என்று கூறியது 3 ல் ஒரு பாங்காக வாய்ப்பு உள்ளது!
குழாய் பதித்த பின்னர் அவர்கள் 90 Bar ல் இருந்து 181 Bar வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு
இதனால் ஆயில் வேகமாக தேவையான இடத்திற்கு சென்று சேர்க்கலாம்!
அதாவது ஒருநாள் வேலை அரைநாளில் முடிந்து விடும்!
மேற்கொண்டு என்ன நடக்கும் என்று நீங்களே யோசிச்சிக்குங்க நண்பர்களே..!

எனவே, குழாய் பதித்த பின்னர் மண்டையை சொரிந்து கொண்டு நிற்காமல், குழாய் அமைக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை!

– பசுமை விவசாயி