சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம்: கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ‘கபாலி’ திரைப்படத்தைத் தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, தற்போது ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார். உள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு, இப்படத்துக்கான நடிகர் – நடிகைகளைத் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதுமுகங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற இருப்பதாக சமீபத்தில் அறிவித்த சவுந்தர்யா, அதற்கு முன்பே தன்னுடைய இந்த படத்துக்கான வேலைகளை தொடங்கிவிட்டார்.

வெங்கட் பிரபு இயக்கிய ‘கோவா’ படத்தை தயாரித்த சவுந்தர்யா, இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் 3டி படமான ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.