நயன்தாராவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!

சற்குணம் தயாரிப்பில், அவருடைய உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் – ‘டோரா’.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் இது என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் ‘டோரா’ படம் இம்மாதம் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை, வினியோக துறையில் வலுவாக காலூன்றி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

எத்தனை அற்புதமான படமாக இருந்தாலும்  புதுமையான முறையில் படத்தை விளம்பரம் செய்தால் தான், படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து வெற்றி பெற வைக்க முடியும் என்பதை புரிந்துகொண்டு, ‘டோரா’ படத்தை வெற்றிப்படம் ஆக்க புதிய விளம்பர யுக்தியை கையாண்டுள்ளது ஆரா சினிமாஸ்.

அமானுஷ்யமான ஒரு காரை மையமாகக் கொண்டு டோரா படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே டோரா படத்தில் இடம்பெறும் அந்த காரைப் போன்று டம்மியான கார்களை உருவாக்கி, சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப், ஐனாக்ஸ், பிவிஆர், தேவி, லுக்ஸ், சங்கம் உட்பட பல திரையரங்குகளில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அந்த கார் உடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தால், அவர்களில் இருந்து சிலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் ‘டோரா’ நாயகி நயன்தாராவை சந்திக்கவும், அவருடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தன்னுடைய படங்களின் புரமோஷனுக்கு வராத நயன்தாரா, ‘டோரா’ படத்தின் புரமோஷனுக்காக ரசிகர்கள் உடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முன்வந்ததே பெரிய விஷயம்தான்.

நயன்தாரா ரசிகர்கள் தங்கள் அபிமான தாரகையை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கான இ ந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே!

0a