‘ஒண்டிக்கட்ட’ ரிலீஸுக்கு ரெடி!

பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட’.

விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் ‘உச்சத்துல சிவா’, ‘தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி

 இசை – பரணி

பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா

எடிட்டிங்  – விதுஜீவா

நடனம் – சிவசங்கர், தினா, ராதிகா

ஸ்டண்ட் – குபேந்திரன்

கலை – ராம்

தயாரிப்பு மேற்பார்வை  – பாண்டியன்

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் இசையமைப்பாளர் பரணி கூறுகையில், “சினிமாவில் நிலவிவந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்து இப்போது தான் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது…இந்நிலையில் நான்  இசையமைத்து இயக்கி இருக்கும் ‘ஒண்டிக்கட்ட’ திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்றார்

Read previous post:
s5
செயல் – விமர்சனம்

விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அப்புலு, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘செயல்’. அடாவடித்தனமான் ஒரு ரவுடியை காமெடி பீஸாக்கி

Close