தேமுதிக-104, மதிமுக-29, தமாகா-26, விசிக-25, சிபிஎம்-25, சிபிஐ-25

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதால், மேற்கண்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டு, கூட்டணிக் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த், ஜி.கே.வாசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் வைகோ செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார்

தொகுதிப் பங்கீடு விவரம்:

தேமுதிக – 104 தொகுதிகள்

மதிமுக – 29 தொகுதிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி- 25 தொகுதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 25 தொகுதிகள்

இந்திய கம்யூனிஸ்ட் – 25 தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் – 26 தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காக தேமுதிக 20 தொகுதிகளையும், மக்கள் நலக் கூட்டணி 6 தொகுதிகளையும் விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0a1f

Read previous post:
0a1x
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் ஜி.கே.வாசன்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த ஜி.கே.மூப்பனாரின் மகனுமான ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்

Close