“புஷ்பா புருஷன்’ என்ற அடையாளத்தால் என் மனைவிக்கு ரொம்ப வருத்தம்!” – சூரி

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசியதாவது:

இதுநாள் வரை ‘பரோட்டா சூரி’யாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு ‘புஷ்பா புருஷன்’ என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். என் மனைவி தான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார்.

ஷூட்டிங்கில் நடிக்கும் நாங்கள் எவ்வளவு எக்ஸ்ட்ராவா பேசினாலும் அதை அனுமதிப்பார் இயக்குனர் எழில். அவருக்கு தெரியும் எதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று.

உதயநிதி சின்சியரான நடிகர், நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பிரஸ்மீட்டை கூட கேன்சல் செய்துவிட்டு எனக்காக மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்.

ரெஜினா பாடல் ஒன்ஸ் மோர் கேட்கும் வகையில் வந்திருக்கிறது. அதுவே 50 நாட்கள் வரை ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வரும்.

இவ்வாறு சூரி பேசினார்.