ஆர்.கே.நகர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக் கோட்டு உதயம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டு உதயம் போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கிறது. இதில், அ.தி.மு.க சசிகலா அணியில் டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன், தி.மு.க-வில் மருது கணேஷ், தே.மு.தி.க-வில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் லோகநாதன், பா.ஜ.க-வில் கங்கை அமரன் போட்டியிடுகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், அவரது கணவர் மாதவனும் போட்டியிடப் போவதாகக் கூறி வருகிறார்கள்

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  கலைக்கோட்டு உதயம் போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

கலைக்கோட்டு உதயம் பத்திரிகையாளர், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read previous post:
0
சசிகலா அணி கூட்டத்தில் பா.வளர்மதி, நிர்மலா பெரியசாமி ‘குழாயடி’ சண்டை!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில், அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதை ஒட்டி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நட்சத்திர பேச்சாளர்கள்

Close