இன்னும் எத்தனை தமிழர்களை காவு வாங்கும் ஆரியத்துவம்…?

முத்துக்குமார்…
செங்கொடி…
அனிதா…

இன்னும் எத்தனை தமிழர்களை காவு வாங்கும் ஆரியத்துவம்…?

சமூகநீதிக்கு எதிரான மனுநீதியின் கொலைவெறித் தாண்டவம் இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்குப் பெற வேண்டும். அதற்காக இயற்றப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்துக்கு ‘அனிதா சட்டம்’ என பெயரிட வேண்டும்.

தகுதி இருந்தும் விரும்பிய கல்வியை பெற இயலாமல் இனியொரு உயிர் தமிழ் மண்ணிலிருந்து நீங்கக் கூடாது. இதை உறுதி செய்ய, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

இவற்றை செய்து முடிக்காத எங்களை – இவற்றை செய்து முடிக்கும் வரை எங்களை – மன்னிக்காதே அனிதா!

பி.ஜே.ராஜய்யா

ஆசிரியர், ஹீரோநியூஸ் ஆன்லைன்.காம்

Read previous post:
0a1e
புரியாத புதிர் – விமர்சனம்

இசையமைப்பாளராகும் லட்சியத்தோடு வலம்வரும் நாயகன் விஜய் சேதுபதியும், இசை ஆசிரியையாக பணிபுரியும் நாயகி காயத்ரியும், சில சந்திப்புகளில் காதலர்கள் ஆகின்றனர். பிறகு, விஜய் சேதுபதியின் செல்பேசிக்கு காதலி

Close