மேடம், பிரபஞ்சத்தின் எந்த மூலையில் போய் நீங்கள் சொன்னாலும் பொய் பொய்தான்!

Sushma Swaraj at UN: “We made IITs. Pakistan made Lashkar.”

மேடம்,

ஐஐடிக்கள், அணைகள், இஸ்ரோ, அரசியல் சட்ட அமைப்பு அத்தனையும் காங்கிரஸும், நேருவும் உருவாக்கியது.

உங்களுடைய உருவாக்கங்கள்

டீமானிடைசேஷன்
பெட்ரோல் / டீசல் விலையுயர்வு
கொலைகள் செய்யும் கோரட்சகர்கள்
வன்புணரும் போலி சாமியார்கள்
காடழித்து விட்டு நதிகளை இணைக்க துடிக்கும் குருமார்கள்
சிறுதொழிலைக் கொன்றொழிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்புகள்
தன்னாட்டு மக்களையே கொன்று குவிக்க பெல்லட் கன்னையும், ராணுவத்தையும் ஏவி விடும் அரசமைப்பு
ஒரு மத நாடாக மாற துடிக்கும் அரசு

பாகிஸ்தான் பற்றிய ஒரு முக்கியமான செய்தியை நீங்கள் சாய்ஸில் விட்டீர்கள்.

பனாமா பேப்பரில் பெயர் வந்தவுடன் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரீப்பையே பதவி நீக்கம் செய்கிறது.

நீங்கள் பெயர் இருந்தாலும் அமிதாப் பச்சனை குஜராத்தின் ப்ராண்ட் அம்பாசிட்டராக மாற்றுவீர்கள்.

உங்களுடைய இலட்சணம் இவ்வளவு தான். இதுநாள் வரை பொய்களை இந்தியாவிற்குள்ளும் சர்வதேச மோடி ட்ராவல்ஸ் கைடாகவும் சொன்னீர்கள். இப்போது வளர்ந்து ஐ.நாவில் சொல்ல ஆரம்பித்து இருக்கிறீர்கள். Great Improvement.

பிரபஞ்சத்தின் எந்த மூலையில் போய் நீங்கள் சொன்னாலும் பொய் பொய் தான். நீங்கள் நீங்கள் தான்.

NARAIN RAJAGOPALAN

 

Read previous post:
0a1d
Oru Nalla Naal Paathu Solren – First Look Motion Poster

Oru Nalla Naal Paathu Solren 7C's Entertainment PVT.LTD and Amme Narayana Entertainment Written and Direction : P. Arumugakumar Produced by

Close