முதலாளிகளுக்கு பிடிக்காத வார்த்தை ரஜினிக்கும் பிடிக்காது தான்…!

‘‘வேலை நிறுத்தம்!’’

இந்த வார்த்தை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பிடிக்காது.

அதிகாரத்தை தாங்கிப் பிடிப்பவர்களுக்கும் பிடிக்காது.

லாபம் ஈட்டிக் கொழுத்துக்கொண்டே இருக்கும் முதலாளிகளுக்குப் பிடிக்காது.

பணம் தான் எல்லாம், உழைப்பு என்பது தன் முடிக்குச் சமானம் எனக் கருதும் நபர்களுக்குப் பிடிக்காது.

தான் மட்டும் மற்றவர்களை துன்புறுத்திக் கொண்டே இருக்க வேண்டும், பதிலுக்கு யாரும் தன்னை முறைப்பதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஆணவக்காரர்களுக்குப் பிடிக்காது.

எதையும் தாங்கள் இழந்து விடக்கூடாது, அடுத்தவர்கள் மூலம் பெற்று விடலாம் என வாழும் சுயநலப் பேர்வழிகளுக்குப் பிடிக்காது.

சகமனிதரை நேசிக்காத, அவன் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளாத நபர்களுக்குப் பிடிக்காது.

மிஸ்டர் ரஜினி… நீங்கள் இதில் எந்த வகை?

ஜா.மாதவராஜ்

தீக்கதிர்

# # # # #

“… நாமெல்லாம் ‘வேலை நிறுத்தம்’ செஞ்சா தாங்காது நாடு…” என்று சினிமாவில் தத்துவம் பாடும் ரஜினி என்னும் நடிகருக்கு,

நிஜத்தில் தமிழில் பிடிக்காத வார்த்தை ‘வேலை நிறுத்தம்’ என்றால், அது தனிநபர் வாதமல்ல; தொழிலாளர்களுக்கு எதிரான முதலாளித்துவ ஆதரவுச் சொல்.

முதலாளிகளுக்கும் பிடிக்காத வார்த்தை வேலை நிறுத்தம். ரஜினிக்கும் பிடிக்காது தான்.

இந்திய முதலாளித்துவ நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லையே? தொழிலாளர்கள் தான் ‘வேலை நிறுத்தம்’ என்னும் ‘போர்’ நடத்தணும்…!

Yuma JAHARO [தமிழச்சி]
# # # # #

பரம்பரை முதலாளி கூட தொழிலாளர் நலன் கருதி சில நல்லதை செய்வார்கள். ஏனென்றால், தன்னிடம் உள்ளவர்கள் வேறு இடம் சென்று விட கூடாது என்று.

இந்த புது பண்க்காரர்களுக்கு. தொழிலாளிகளைப் பற்றி எந்த உணர்வும் இருக்காது.

அதுவும் தொழிலாளியாக இருந்து முதலாளியான ரஜினி போன்றோருக்கு எந்த உணர்வும் இருக்காது.

THOZHIR SELVI