”சமகால முதலாளித்துவத்துக்கு புரட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!” – ரகுராம் ராஜன்

“பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கமைப்புகள் பெரும்பான்மையான மக்கள் தொகுதிக்கு எதையும் வழங்குவதில்லை, இதனால் புரட்சி அச்சுறுத்தல் சமகால முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது” என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சிகாகோ பல்கலை. பேராசிரியராக இருக்கும் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன், பிபிசி ரேடியோ4 நிகழ்ச்சியில் பேசியதாவது:

உலகம் முழுதும் உள்ள அரசுகள் சமூக சமத்துவமின்மை என்ற ஒரு பெரிய விவகாரத்தை புறக்கணிக்கலாகாது.

முதலாளித்துவம் பெரிய அச்சுறுத்தலில் உள்ளது. அது பெரும்பான்மையோரின் பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்கவில்லை, புறக்கணிக்கிறது. இதனால் முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சி ஏற்படும்.  சம வாய்ப்புகளை வழங்குவதில்லை, இதனால் வீழும் மனிதர்கள் இன்னும் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

உற்பத்தி வழிமுறைகளை சமூகவயமாக்கும்போது, சமச்சீர் தன்மை தேவை, இதில் தேர்ந்தெடுப்பு கூடாது. வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. முன்பெல்லாம் ஒரு சாதாரண படிப்பின் மூலம் ஒரு நடுத்தர வேலை வாய்ப்பு இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் வெற்றி பெற வேண்டுமெனில் நல்ல கல்வி தேவைப்படுகிறது.

2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகே அனைத்தும் மாறிவிட்டது. பள்ளிகள் சீரழிந்து வருகின்றன, குற்றங்கள் அதிகரிக்கின்றன, சமூக நோய்க்கூறுகள் அதிகரிப்பதால் உலகப் பொருளாதாரத்துக்கு சமூகங்கள் தங்கள் உறுப்பினர்களைத் தயார்ப்படுத்த முடியவில்லை.

இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.

 

Read previous post:
0a1a
”பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – அக்கிரமத்தின் உச்சம்”: சத்யராஜ் ஆவேசம்!

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Close