நம்மூரில் டிகாப்ரியோ இல்லை; மோடிதான் இருக்கிறார்!

Aviator என ஓர் ஆங்கிலப் படம். Hughes கதாபாத்திரத்தில் Dicaprio நடித்து மார்டின் ஸ்கார்சசி இயக்கியிருப்பார்.

போரை பற்றிய படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பார் டிகாப்ரியோ. எடுத்தவரை படத்தை போட்டு பார்க்கும்போது, நிஜமாகவே வானில் விமானம் பறக்க வைத்து, விமானத்தில் இருந்து அதை படம் பிடித்த உழைப்பு ஏதும் தென்படாது. ஸ்டுடியோவில் கயிறு கட்டி ப்ளைட் மாடலை கேமராவுக்கு அருகே வைத்து எடுப்பதை போலவே தெரிகிறது. காரணம் புரியாமல் மண்டையை உடைத்துக் கொள்ளும் டிகாப்ரியோ, ஒரு கட்டத்தில் காரணத்தை கண்டுபிடித்து விடுகிறார். வானுக்கும் விமானத்துக்கும் இருக்கும் தூரத்தை காட்ட இன்னுமொரு object திரையில் இருக்க வேண்டும். அதுதான் தூரத்தை relate செய்து காட்ட இயலும். Relativity!

வானில் வேறென்ன இருக்க முடியும்?

Clouds!

மேக மூட்டம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விமானம் பறக்கவிட்டு படம்பிடித்தால் திரையில் வானத்தின் பிரம்மாண்டம் தெளிவாக தெரியும். மேகங்களுக்குள் இருந்து வரும் விமானம், மேகத்துக்குள் மறையும் விமானம் என மக்களால் மேகத்துடன் relate செய்து வானை பிரமிக்க முடியும். டிகாப்ரியோ ஒரு வானியல் அறிஞரை வேலைக்கு அமர்த்துகிறார்.

ஷூட்டிங்கின்போது இருவரும் பேசிக் கொள்ளும் ஒரு வசனம்:

Di Caprio: Why there’s no clouds?

Climatologist: They are clouds Mr.Hughes. They move. That’s what they do.

Di Caprio: Find me some goddamn clouds.

என கத்திவிட்டு செல்வார். கொஞ்ச நேரம் கழித்து வானியலாளர் குதித்து கொண்டு ஓடி வந்து சந்தோஷமாக ‘மேகங்களை கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். உடனே அங்கு விமானங்கள் அனுப்பி படம் பிடிப்பார்கள்.

நம்மூரில் டிகாப்ரியோ இல்லை. மோடிதான் இருக்கிறார். ஆதலால் Find some goddamn clouds என மோடியே சொல்லியிருக்கிறார்.

அநேகமாக மோடிக்கு மேகங்களை கண்டுபிடித்து தந்த வானியலாளர் பால்கோட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த மாலனாக இருக்கலாம்.

Aviator படமாவது drama ரகம். மோடி பேசுவது tragic comedy ரகம்.

தியேட்டருக்குள் நுழைந்தது நம் தப்பு. குறை கூறினால் என்ன நியாயம்?

பார்த்து ரசியுங்கள்

RAJASANGEETHAN