“பப்ளிக் ஸ்டார்” ஆனார் ‘தப்பாட்டம்’ கதாநாயகன்!

நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பட்டப் பெயர் சேர்த்துக்கொள்வது தமிழ் திரையுலகில் காலங்காலமாக இருந்துவரும் மரபு. அத்தகைய பட்டப் பெயர்கள் சிலருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்; வேறு சிலருக்கு பொருத்தமின்றி கோமாளித்தனமாய் இருக்கும். இந்த பாரம்பரியப்படி “பப்ளிக் ஸ்டார்” என்ற பட்டப் பெயருடன் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் ‘தப்பாட்டம்’ கதாநாயகன் துரை சுதாகர்.

தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தப்பாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள துரை சுதாகருக்கு ஜோடியாக டோனா நடித்திருக்கிறார். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘தப்பாட்டம்’ குறித்து இதன் இயக்குனர் முஜிபூர் ரஹ்மான் கூறுகையில், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதையும் இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்” என்றார்.

மூன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடலாசிரியர் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு – ஆதம் பாவா

விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.