ஜூலை 17ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று (புதன் கிழமை) அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தற்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தேதிக்குள் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் இதற்கான தேர்தல் தொடர்பான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அவை:

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் – ஜூன் 14

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் – ஜூன் 28

வேட்புமனுக்கள் பரிசீலனை – ஜூன் 29

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் – ஜூலை 1

வாக்குப்பதிவு – ஜூலை 17

வாக்கு எண்ணிக்கை – ஜூலை 20.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் கட்சியின் கொறடா உத்தரவு மக்கள் பிரதிநிதிகளை கட்டுப்படுத்தாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.