அமரர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

மறைந்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் நல்லடக்கம், புதுச்சேரி அரசின் முழு மரியாதையுடன் இன்று (23ஆம் தேதி ஞாயிறு)  மாலை நடைபெறுகிறது.

சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21ஆம் தேதி புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக, புதுச்சேரி முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

பிரபஞ்சனின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு இலக்கிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்றுக்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “பிரபஞ்சனின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.

அதன்படி இன்று (23ஆம் தேதி ஞாயிறு) மாலை அரசு மரியாதையுடன் பிரபஞ்சனுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள பிரபஞ்சனின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Read previous post:
0a1a
அடங்க மறு – விமர்சனம்

வழக்கமான போலீஸ் ஸ்டோரி (நேர்மையான போலீஸ் அதிகாரி, நேர்மை இல்லாத பணக்காரர்கள்). சட்டப்படி முடியாததால் குறுக்கு வழியில் குற்றவாளிகளைக் காலி பண்ணும் வழக்கமான பழி வாங்கும் கதை.

Close