கானா ஜாம்பவான்கள் இணையும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’!

“வாழும்போது வைக்காதடா சேத்து

ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!”

– மரண கானாவின் சில வரிகள் இவை.

வேறெந்த இசை வடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான் அமைந்து இருக்கிறது. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லாமல் மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிபன் பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எது வேண்டுமானாலும் செட்டாகுமாறு  இருப்பதே கானா பாடல்களின் தனி சிறப்பு.

போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டும் அல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை கானா பாடல்களுக்கு உண்டு.

0a1x

அந்த கானா எனப்படும் உலகில் ஜாம்பவான்களாகத் திகழும் கானா பாலா மற்றும் மரண கானா விஜி ஆகியோர், விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ திரைப்படத்தில் பாடல்கள் எழுதி, பாடி, நடித்துள்ளனர்.

கானா பாடல்களின் ஒரு வகையான மரண கானாவில் கைதேர்ந்தவர் மரண கானா விஜி. ‘டங்கமாரி ஊதாரி’ பாடலை பாடிய இவர் முதன்முதலாக முகம் காட்டியுள்ள படம் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ . இப்படத்தில்  ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடலை எழுதி,பாடி, நடித்துள்ளார்.

கானா பாலா மற்றும் மரண கானா விஜி ஆகியோரின் பாடல்களுக்கு சுகுமார் இசையமைத்து உள்ளார்.

எஸ்.டி.குணசேகரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நிதின் சத்யா, ரேக்க்ஷா ராஜ், யோகிபாபு, சிங்கம் புலி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோ பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் மே 13ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Read previous post:
0a1w
24 – விமர்சனம்

பேய் போலவே டைம் மிஷின் எனப்படும் கால எந்திரமும் கற்பனையானது. உலகில் இல்லாதது. எதிர்காலத்தில் சாத்தியம் என உறுதியாகச் சொல்லவும் முடியாதது. எனினும், இல்லாத பேயை மையமாக

Close