குஜராத்தில் வாகை சூடிய தலித் போராளி ஜிக்னேஷூக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வட்கம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு, பாஜக வேட்பாளரை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றுள்ள தலித் போராளி ஜிக்னேஷ் மேவானிக்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜிக்னேஷூக்கு ரஞ்சித் அனுப்பியுள்ள வாழ்த்து ட்விட்டில், “உங்களது வெற்றி, பாசிசத்துக்கு எதிரான நமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும். தமிழகத்திலிருந்து உங்களுக்கு அன்பும், வணக்கமும்” என்று கூறியுள்ளார்.