விஜய் சேதுபதி நடிக்கும் சாகச காமெடி படம் – ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

வித்தியாசமான கதைகள்  மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பெயர் பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் அடுத்த படமான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இவருடைய பெயர் சொல்லும் அப்படிப்பட்ட  ஒரு  வித்தியாசமான படம்.

இது ஒரு சாகச (அட்வெஞ்சர்) காமெடி படமாகும் . இதில் விஜய் சேதுபதி இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடிஇன  தலைவராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கியிருக்கிறார். இவரது நடிப்புத் திறனையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்ததாக கூறுகிறார் இப்படத்தில் இயக்குனர்  ஆறுமுககுமார் .

”8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி இக்கதையில் விளையாடியுள்ளார். இப்படத்தின் இயக்குனராக மட்டும் இன்றி, அவரது தீவிர ரசிகராகவும் இப்படத்தின் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக மிக  மிக  சுவாரசியமானது மட்டுமின்றி  மிகவும் சவாலானதும் கூட.  இச்சவாலை அவர் மிக சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டதைக் கண்டு  வியந்தேன் .

‘“இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது.  படப்பிடிப்பு கிட்டத்தட்ட  முடிந்தாகிவிட்டது. விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும்  கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களில் ரசனையை மனதில் வைத்துக்கொண்டு தான் ‘ஒரு நல்ல நாள்  பாத்து சொல்றேன்’ படமாக்கி உள்ளோம்” இயக்குனர் ஆறுமுககுமார் .