“வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாத கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்!”

7சி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆறுமுககுமார், அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து ஆகியோரது தயாரிப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், டேனியேல், ரமேஷ் திலக், கூத்துப்பட்டறை முத்துக்குமார், நடிகைகள் காயத்ரி, நிஹாரிக்கா, இயக்குனர் ஆறுமுககுமார், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன், எடிட்டர் கோவிந்தராஜ், பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, முத்தமிழ், மற்றும் திங்க் மியூசிக் சந்தோஷ், லைன் புரொட்யூசர் யோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.

p15

இவர்களில் சிலரது பேச்சு விவரம் வருமாறு:

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா:

எனக்கு பலவீனங்களை கடந்து வருவதற்கு எழுத்தும், பாடல்களும் கிரியா ஊக்கிகளாக அமைந்தன. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் நல்ல நட்பு அமைந்தது. அப்படி அமைந்த நட்பு தான் இந்த படத்தில் என்னை கொண்டு வந்து சேர்த்தது. அந்த நட்பு பாடலில் பிரதிபலிக்கும். சமூக கோபங்களை பாடல்களில் ஆங்காங்கே தூவியிருக்கிறேன்.

நடிகர் கௌதம் கார்த்திக்:

இந்த படத்தில் ஹரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரொம்பவே எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். என்னுடைய ரியல் லைஃபிலும் நான் அப்படி தான்.

இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி என்னை பரிந்துரைத்தது எனக்கு பெருமை. அவர் எப்போதுமே சினிமாவையே நினைத்துக் கொண்டிருப்பவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

சினிமாவிலும், வாழ்க்கையிலும் எனக்கு நண்பனாக பயணித்து வருபவன் டேனி தான்.

கேமராமேன் ஸ்ரீசரவணன் ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒளிப்பதிவு செய்யக் கூடியவர். படத்துக்காக என்ன வேணாலும் செய்ய துணிந்தவர்.

இந்த படத்துக்காக புதுமையான இசையை கொடுத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

இயக்குனர் ஆறுமுக குமாருக்கு இது முதல் படம் தான் என்றாலும் தனக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்கி, சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்.

நடிகை நிஹாரிக்கா:

இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் தெரியாது, குழுவில் நடிகர்கள் யாரையும் தெரியாது, வசனம் கூட சரியாக தெரியாது. ஆனாலும் என்னை உற்சாகப்படுத்தி எனக்கு ரொம்பவே ஆதரவு கொடுத்தார்கள்.

0a1d

இயக்குனர் ஆறுமுககுமார்:

இந்த கதையின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள் அம்மே நாராயணா எண்டர்டெயின்மெண்ட்.

நான் இயல்பாக பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது  தான் ரொம்ப பெரிய விஷயம். தன் கதாபாத்திரத்தை எப்படி மெருகேற்றி செய்வது என்ற எண்ணம் உடையவர். அது தான் அவரின் வெற்றிக்கும் முக்கிய காரணம்.

படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடினு சொன்னா அது டேனியல் தான். ரொம்பவே ஜாலியான ஹீரோ. இந்த படத்தில் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாத ஒரு கேரக்டரில் கௌதம் கார்த்திக் அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு செட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது.

படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டினுக்கு இசையமைக்க நல்ல ஸ்கோப் இருந்தது, அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

எல்லோரும் ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு படமாக இது நிச்சயம் இருக்கும்.