பிரியதர்ஷனின் ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியது விஜய் டிவி!

ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது, அப்படத்தின் வர்த்தக பலத்தையும், அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும். ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நிமிர்’ அத்தகைய சிறப்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க, அவருடன் பிரபல இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், இயக்குனர் சமுத்திரக்கனி, பார்வதி நாயர், நமீதா பிரமோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ளார்.

0a1e

விரைவில் ரிலீசாக இருக்கும்  ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது.

இது குறித்து விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி கூறுகையில், ”குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான  படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போடு உள்ளோம். ‘நிமிர்’ அவ்வாறான சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம்” என்றார்.

 

Read previous post:
0a1d
விநியோகஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல் ராஜா தலைமையில் புதிய அணி!

வருகிற (டிசம்பர்) 24ஆம் தேதி நடைபெற இருக்கும் சென்னை -காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஞானவேல் ராஜா தலைமையில் புதிய

Close