ஜல்லிக்கட்டு பற்றிய ‘வாடிவாசல்’ நாவலை படமாக்க வெற்றிமாறன் திட்டம்!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘லாக்கப்’ நாவலை மையமாக வைத்து ‘விசாரணை’ படத்தை இயக்கினார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டதோடு, பல விருதுகளையும் பெற்றது. ஆஸ்கர் விருதுக்குக் கூட இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாகக் கொண்ட ‘வாடிவாசல்’ நாவலை திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு, அதற்கான உரிமையை வாங்கியுள்ளார் வெற்றி மாறன். இந்நாவலை பிரபல எழுத்தாளர் அமரர் சி.சு.செல்லப்பா எழுதியிருக்கிறார்.

தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ஆகியவற்றை இயக்கி முடித்தபின், ‘வாடிவாசல்’ நாவலை வெற்றிமாறன் படமாக்குவார் என தெரிகிறது.