அரசியல்வாதி அவதாரம் எடுக்கிறார் ‘எமன்’ விஜய் ஆண்டனி!

எதிர்மறையான தலைப்புகளைக் கொண்டு, திரைக்களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி,  விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ளார்.

வர்த்தக உலகினரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இப்படத்தில் மியா ஜார்ஜ் நடித்துள்ளார். பிரபல நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்திலும், கிரண், அருள் டி சங்கர், சார்லி மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும்  நடித்துள்ளார்கள்.. ‘நான்’ படப்புகழ் ஜீவா சங்கர் இயக்கியுள்ளார்.

‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘எமன்’ படத்தில் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், கலை இயக்குநர் செல்வக்குமார், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர்கள் அண்ணாமலை, பா.வெற்றி  செல்வன், கோ சேஷா மற்றும் ஏக்நாத்ராஜ்  என பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

இப்படம் குறித்து இதன் இயக்குனர் ஜீவா சங்கர் கூறுகையில், “பொதுவாகவே இதுவரை வந்த அரசியல் படங்கள் யாவும், அரசியலை மக்களின் பார்வையில் இருந்து காட்டக் கூடியதாக தான் இருந்திருக்கிறது. ஆனால் ‘எமன்’ திரைப்படம் அரசியலை அரசியல்வாதிகளின் பார்வையில் இருந்தே பிரதிபலிக்கும்.

இப்படத்தில்  முதல்முறையாக, நம் நாட்டு ஆண் மகன்களின் வீர அடையாளமாக கருதப்படும்  முறுக்கு மீசையை வைத்துக்கொண்டு நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. நிச்சயமாக எங்களின் எமன், சிறந்ததொரு பிரம்மாண்ட பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும்.

யூடூபிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் எங்களின் ‘எமன்’ பட டீசர் முன்னிலை வகித்து வருவது, நான்கு முனைகளில்  இருந்தும் விஜய் ஆண்டனிக்கு பெருகி வரும் புகழை உணர்த்துகிறது” என்றார்.

 

Read previous post:
0a1a
‘தோழர்’ என்பதை அவதூறு செய்த கோவை கமிஷனர் அமல்ராஜ் தான்; சைலேந்திர பாபு அல்ல!

“தோழர் என்று அழைப்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை கூறியுள்ளார்” என்ற செய்தி வெளியானதும், பலர் சைலேந்திர பாபு

Close