வரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’

லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. இந்த படத்தை ‘க்ளாப் போர்டு புரொடக்சன்ஸ்’ நிறுவனம் வரும் (மே) 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.

இதில் நாயகனாக கவின் அறிமுகமாகிறார். இவருக்கு இணையான  கதாபாத்திரங்களில் அருண்ராஜா காமராஜா, ராஜு ஆகிய இருவரும் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் இளவரசு, அழகம் பெருமாள், மன்சூர்அலிகான், மொட்டை ராஜேந்திரன், ராமா, பபிதா, மதுரை ஆச்சி சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நட்பையும் காதலையும் மையமாக வைத்து, நகைச்சுவை கலந்து, அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும் விதமாக உருவாகியிருக்கும் இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைக்க, எழுதி இயக்கியிருக்கிறார் சிவா அரவிந்த்.

Read previous post:
n5
‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்

'நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்:

Close