“ஊழல் பேர்வழிகள் வரிசையில் நிற்கிறார்கள்” – மோடி! மோடியின் தாய் வரிசையில் நின்றார்!

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் தங்கள் வசம் உள்ள சொற்ப எண்ணிக்கையிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன் நீண்ட வரிசையில் பல மணி நேரங்களாக நின்றுகொண்டிருப்பது அன்றாட காட்சியாகி விட்டது.

இது பற்றி கருத்து தெரிவித்த நரேந்திர மோடி, சாமானிய மக்களின் வலியையும், வேதனையையும் உணராமல், “ஊழல் பேர்வழிகள் எல்லாம் ரூ.4ஆயிரத்துக்காக வங்கிமுன் வரிசையில் நிற்கிறார்கள்” என்று எகத்தாளமாக கொக்கரித்தார்.

இந்நிலையில், நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (வயது 97)., குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள வங்கிக்கு வந்தார். வங்கிமுன் காத்துக் கிடக்கும் வரிசையில் வந்து நின்றார். பின்னர், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்தார். அதன்பின் தன்னிடம் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றினார். அவருக்கு 4500 ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளை வங்கி ஊழியர்கள் வழங்கினர்.

கேள்வி என்னவென்றால், “ஊழல் பேர்வழிகள் எல்லாம் வங்கிமுன் வரிசையில் நிற்கிறார்கள்” என்று கொக்கரித்தாரே நரேந்திர மோடி, வரிசையில் நின்ற அவரது தாயார் ஊழல் பேர்வழியா? அல்லது ஊழல் பேர்வழியின் பினாமியா? பினாமி தான் எனில், எந்த ஊழல் பேர்வழியின் பினாமி…?