மோகன்லாலுக்கு ஜோடியாக கவுதமி நடிக்கும் தமிழ்ப்படம் ‘நமது’!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி, கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் நடித்த கவுதமி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்துக்கு தமிழில் ‘நமது’ என்றும், தெலுங்கில் ‘மனமன்தா’ என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் – கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் போற்றப்படுவதுண்டு.

மோகன்லால் – கவுதமி ஜோடி சேரும் புதிய படத்தை சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

எழுதி இயக்குபவர் சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கியிருப்பவர்.

விஸ்வநாத்  – ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்க, இவர்களுடன் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடிமாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

வசனம், பாடல்கள் – மதன்கார்க்கி

ஒளிப்பதிவு   –  ராகுல் ஸ்ரீவத்சவ்

இசை   –  மகேஷ் சங்கர்

தயாரிப்பு   –  ரஜினி கோரப்பட்டி

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி

Read previous post:
0a1f
சாதிய பெருமிதங்களை, வன்முறைகளை உயர்த்திப்பிடிக்கும் ‘மரு…த்தூ’!

இயக்குநர் முத்தையா எடுத்த சமீபத்திய திரைப்படம் 'மருது' முந்தைய திரைப்படம் ‘குட்டி புலி’. இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப்

Close