“கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது”: காவேரி மருத்துவமனை

திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் உடல்நிலை மோசமானதை அடுத்து நேற்றிரவு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் ரத்த அழுத்தம் சீரடைந்தது. தொடர்ந்து அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு காவேரி மருத்துவமனை  நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ சிகிச்சை காரணமாக கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரை மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்துவருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

0a1h