தா.பா.வுக்கு மூச்சுத் திணறல்: அரசு மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேவையான உடற்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.