‘மெர்சல்’ விவகாரம்: மோடிக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில், மோடியின் ஜிஎஸ்டி வரி, செல்லா நோட்டு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை விமர்சிக்கும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு தமிழக சங்கிகளான தமிழிசை, எச்.ராஜா சரமா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் மிரட்டலாய் கோரி வருகின்றனர்.

சங்கிகளின் இந்த மிரட்டலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மட்டுமல்ல, இந்த சங்கிகளுக்கு பெருவாரியான தமிழக இளைஞர்கள் பதிலடி கொடுத்து, MersalVsModi என்ற ஹேஷ்டக்கை இந்திய அளவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் ட்ரெண்டிங் ஆக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும், மோடியை எச்சரிக்கும் வகையிலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் அவர், ”மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் மொழி, கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு. ’மெர்சல்’ விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் தமிழின் பெருமையை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம்”  என எச்சரித்துள்ளார்.

 

Read previous post:
0a1d
‘மெர்சல்’ சர்ச்சை: மக்கள் வேறுபாடுகள் களைந்து ஒன்றிணையும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி தருகிறது!

சீமான் மீது கருத்து வேறுபாடு உண்டு. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கே.டி.ராகவன் ஓவராக சீமானை பேசினார். வேறுபாடுகளை மறந்து எல்லாரும் ஒன்றிணைந்து பாஜகவை துவட்டினோம். கமலை பற்றி

Close