சேட்டுகள் எதிர்ப்பு எதிரொலி: ‘மீசைய முறுக்கு’’ பட பாடல் நீக்கம்!

ஆதி, ஆத்மிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மீசைய முறுக்கு’. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல், இசை உள்ளிட்ட பொறுப்புகளை ஆதி ஏற்றிருக்கும் இப்படத்தை சுந்தர்.சி தயாரித்திருக்கிறார். இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ‘சேட்ஜி’ என்ற பாடலை உருவாக்கி யூடியூப் தளத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

தற்போது அப்பாடல் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹிப் ஹாப் ஆதி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “‘மீசைய முறுக்கு’ படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட ‘சேட்ஜி’ பாடல் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

ஆனால், ‘சேட்ஜி’ என்ற வார்த்தைக்கு குறிப்பிட்ட அர்த்தம் கிடையாது. ‘முதலாளி’யைக் குறிப்பிடும் சொல் அது. நாங்களும் அந்த அர்த்தத்தில் தான் பயன்படுத்தினோம். தங்களுடைய உணர்வுகளை புண்படுத்துவாக கூறியதால் அந்தப் பாடல் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

Read previous post:
0a1e
வேலூர்: குரங்கை சித்ரவதை செய்து கொன்ற 4 மருத்துவ மாணவ மிருகங்கள் சஸ்பெண்டு!

வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் ஜஸ்பர் சாமுவேல் சாகு, ரோகித்குமார் ஏனுகொட்டி, அருண்லூயி சசிகுமார், அலெக்ஸ் செக்கலயில் ஆகியோர். இ ந்த 4

Close