கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது!

“லைக்கா தயாரிப்பில் ரஜினி ‘2.0’-ல் நடிக்கிறார். அதே லைக்காவுடன் சேர்ந்து நீங்கள் ‘மருதநாயகம்’ பண்ணப் போவதாகவும் தகவல் வருகிறதே?” என்று வார இதழ் ஒன்று கேட்ட கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள பதில் வருமாறு:

“நீங்க சரினு போன் பண்ணி சொன்னா போதும், ‘மருதநாயகம்’ தொடங்கிடலாம்’ என்கிறார் லைக்கா சுபாஷ்கரன். ஆனால், அந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன்பான தயாரிப்பு வேலை பெருசு. அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதற்காக, எப்படி வேண்டுமானாலும் இழுத்துவிட்டு விளையாட முடியாது. இப்போது ‘மருதநாயகம்’ ஆரம்பித்தால் முடிக்க ஒரு வருடத்துக்கு மேலாகிவிடும். ஆனால், இப்போது வேறு ஒரு படம் பண்ணுகிறோம். ராஜ்கமல் பண்ணுகிறது. இதில் லைக்காவும் சம்பந்தப்பட்டு இருக்கிறது” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்குமுன் கமல்ஹாசன், “இங்கிலாந்திலுள்ள என் நண்பர் ஒருவர் ‘மருதநாயகம்’ படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்” என்று மட்டும் கூறினார். அந்த நண்பர் யார் என்று சொல்லவில்லை. கமல்ஹாசனின் அந்த நண்பர் – லைக்கா சுபாஷ்கரன் என்பது இப்போது வெளிச்சமாகி இருக்கிறது.