திரிஷா வெளியிட்ட அருண் விஜய்யின் ‘குற்றம் 23’ போஸ்டர்!

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், மெடிக்கோ – கிரைம் – திரில்லராக  உருவாகி வரும் ‘குற்றம் 23’ படத்தின் இரண்டாவது போஸ்டரை நடிகை திரிஷா இன்று வெளியிட்டார்.

இப்படத்தில் அருண் விஜய்யின் பெயர் வெற்றிமாறன் என்பதாலும், அவர் போலீஸ் உதவி கமிஷனராக (ACP) நடிப்பதாலும், இன்று திரிஷா வெளியிட்ட கீழ்கண்ட போஸ்டருக்கு ‘வெற்றிமாறன் ACP’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

0a1m

ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்துவரும் ‘குற்றம் 23’ திரைப்படம், அருண் விஜய்யை வேறொரு பரிமாணத்தில் காட்டும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறது படக்குழு.