‘குரங்கு பொம்மை’ படத்தின் இசை உரிமையை வாங்கினார் யுவன் ஷங்கர் ராஜா!
ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், பாரதிராஜா, விதார்த் நடிப்பில், நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் மம்முட்டி வெளியிட்டார். அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ‘யு 1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் மூலம் பெற்றுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா, இசை உரிமையை பெற்றது ‘குரங்கு பொம்மை’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது.