புற்றுநோய் பாதித்த சிறுமியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்!

இந்த சிறுமியின் பெயர் கோட்டீஸ்வரி. 9 வயதான இச்சிறுமி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோய் முற்றிவிட்டதால், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்.

நடிகர் தனுஷின் தீவிர ரசிகையான சிறுமி கோட்டீஸ்வரிக்கு தனுஷை நேரில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை மட்டுமல்ல; இறுதி ஆசையும்கூட. இதை அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இந்த தகவல் தனுஷின் காதுகளை எட்டியது. உடனே தனுஷ் தனது பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் புறப்பட்டுப்போய், சிறுமி கோட்டீஸ்வரியை நேரில் சந்தித்தார். தனுஷை பார்த்ததும் உற்சாகம் அடைந்த சிறுமி, தனுஷை கட்டியணைத்துக் கொண்டார்.

பின்னர், அரை மணி நேரம் அந்த சிறுமியிடம் உரையாடிக்கொண்டிருந்த தனுஷ், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அன்புடன் விடை பெற்றுச் சென்றார்.

0a4y