கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் வாழ்த்து! ஜெயலலிதா கப்சிப்!!

நடிகர் சிவாஜி கணேசனை தொடர்ந்து திரைத்துறையில் சிறப்பான பங்காற்றியதற்காக நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய செவாலியர் விருதினை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலத்தினர் மட்டுமல்லாது, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் கமலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், பாரதிய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார்கள்.

இந்நிலையில், செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய சினிமாவின் பெருமையை இந்த விருதின் மூலமாக புதிய எல்லைகளுக்கு கொண்டு சென்றுள்ளீர்கள். உங்கள் பன்முக ஆளுமையால் இந்திய சினிமாவை உலகப் படங்களுக்கு இணையாக கொண்டு சென்றதற்காக நீங்கள் மதிப்புமிக்க செவாலியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.