கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி படத்தின் தலைப்பு ‘பேட்ட’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘பேட்ட’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இன்று (செப்டம்பர் 7) மாலை 6 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

0a1e

ரஜினியுடன் இணைந்து இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது.

ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

இப்படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் ரஜினி.

Read previous post:
0a1e
“ஒரே வாரத்தில் ரூ.16 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடுகிறது ‘இமைக்கா நொடிகள்”

நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ ஆகஸ்டு 30ஆம் தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க,

Close