‘களவாணி மாப்பிள்ளை’ தினேஷுக்கு மாமியார் ஆனார் தேவயானி

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு ‘களவாணி மாப்பிள்ளை’ என்ற படத்தை தயாரிக்கிறது.

தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினருடன் முக்கிய திரைப் பிரபலங்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

0a1f

இப்படம் பற்றி  இயக்குனர் காந்தி மணிவாசகம் கூறுகையில், “என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடி வைத்திருப்பார்…அதன்படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன்.. பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன்.

வழக்கமாக மாமியார் – மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது. ஜெயித்திருக்கிறது. மாமியார் – மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும்…அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்டபோது தயங்கினார்.. முழு கதையையும் கேட்டவுடன் ஓ.கே.சொன்னார். அந்தளவுக்கு மாமியார் – மருமகன் பிரச்சனையை  இதில் கையாண்டிருக்கிறோம்.

ஜாலியான பொழுதுபோக்கு படமாக ‘களவாணி மாப்பிள்ளை’ உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகிறது” என்றார் இயக்குனர் காந்தி மணிவாசகம்.

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜ், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

தயாரிப்பு  மேற்பார்வை – சிவசந்திரன்

நிர்வாக தயாரிப்பு  – ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  – காந்தி மணிவாசகம்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி

 

Read previous post:
0a1e
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி படத்தின் தலைப்பு ‘பேட்ட’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘பேட்ட’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இன்று (செப்டம்பர் 7) மாலை 6 மணிக்கு

Close