“நான் ‘எமன்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் 2 பேர்”: மியா ஜார்ஜ் பேட்டி

பிரபல இசையமைப்பாளரும்,வெற்றிகரமான முன்னணி நாயக நடிகர்களில் ஒருவராக திகழ்பவருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எமன்’.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இப்படத்தை ஜீவா சங்கர் இயக்கி உள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படத்தை, ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கம், ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பொரேஷன்’ சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

‘அமர காவியம்’ முதல் சமீபத்தில் வெளியான ‘ரம்’ திரைப்படம் வரை, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ள ‘எமன்’ திரைப்படம் பற்றி கூறியதாவது:-

“எமன் படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று, என்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜீவா சங்கர் இப்படத்தின் இயக்குனர். மற்றொன்று, எப்போதுமே தனித்துவமான தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் ஆண்டனி இதில் நாயகன்.

ஜீவா சங்கரோடு நான் இணைந்து பணியாற்றி இருக்கும் இரண்டாவது படம் ‘எமன்’. ‘அமர காவியம்’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் நான் இந்த ‘எமன்’ படத்தில் நடித்து இருக்கிறேன்.

விஜய் ஆண்டனி ஒரு எளிமையான மனிதர். நடிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, 24 மணி நேரமும் அயராது உழைக்கும் கலைஞர். அவரோடு இணைந்து பணியாற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘எமன்’ படத்தில் நான் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். அது மட்டுமின்றி. இந்த படத்தில் எனக்கு முதல் முறையாக ஒரு பிரத்யேகமான பாடல் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த பாடல் என்னை முற்றிலும் ஒரு மாறுபட்ட மியா ஜார்ஜ் ஆக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டும்” என்று உற்சாகத்துடன் கூறினார் .

சமகால அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படம் வருகிற (பிப்ரவரி) 24 ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
0a1e
தொலைக்காட்சி அதிகாரியால் வரலட்சுமி சரத்குமார் சந்தித்த மோசமான அனுபவம்!

தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரியால் தான் சந்தித்த ஒரு மோசமான அனுபவம் பற்றி நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் தமிழ்

Close