பல்லு கூசுற அளவுக்கு பொய் பேசும் நிர்மலா சீதாராமன்!

இப்போதான் புரிஞ்சது, ஏன் பாஜக.வில் நிர்மலா சீதாராமனுக்கு பெரிய பெரிய பொறுப்பா குடுக்குறாங்கன்னு. அம்மா பல்லு கூசுற அளவுக்கு பொய்யி பேசுது.

கீழடி ஆய்வாளர் அமர்நாத் இடமாற்றம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “இந்தியா முழுதும்  அமர்நாத் போல 23 பேர் மாற்றப்பட்டு உள்ளார்கள்” என்று பதில் சொல்கிறார்.

ஆறு மாதத்திற்கு முன்புதான் பாஜக அரசு ஒரு   ஜிஓ பாஸ் பண்ணுது. இதன்படி இரண்டு ஆண்டுக்கு மேல் ஒரு இடத்தில் பணிபுரிபவர்களை மாற்றம் செய்யலாம் என்கிறார்கள். இது நிர்வாகத்தில் இருப்பவர்களுக்குப்  பொருந்தும். ஆனால், களத்திலே வேலை செய்பவர்களுக்கு எப்படி பொருந்தும்? இதை காரணம் காட்டி இந்த பணியிட மாற்றத்தை மத்திய அரசு நிகழ்த்தி இருக்கிறது இந்த புதிய கொள்கை முடிவின்படி இந்தியாவிலே தொல்லியல் துறையில் பழிவாங்கப்பட்ட முதல் நபர் அமர்நாத் அவர்கள் தான்.

தொல்லியல் துறைகளில் அலுவலகங்களில் பணிபுரியும் பல பேர் மாறுதலுக்கு வந்திருப்பார்கள். அவர்கள் கணக்கையும் அமர்நாத் கணக்கோடு சேர்த்து 23 பேர் மாற்றம்னு இந்தம்மா   கூசாம சொல்லுது..

இப்படித்தான் இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளை மூட காரணமான WTOன் TFA உடன்படிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டு, இல்லைன்னு சொன்னாங்க..

6 மாசம் முன்னாடி காவேரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக் கூடாதுன்னு கன்னட அமைச்சர்களுடன் சேர்ந்து மனு கொடுத்துட்டு, இன்னைக்கி தமிழ்நாட்டுல வந்து தைரியமா, தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அதுவும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ் மக்களை தன் கட்சி குண்டர்களை வைத்து தாக்கிவிட்டு, ஸ்டைலா பேட்டி கொடுக்குறாங்கன்னா..

சத்தியமா…

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய முட்டாக் குடி நாம தானுங்கோ…!

ANBE SELVA

Read previous post:
0a
“கீழடியில் அந்த ஒரு ஆளு தான் நியாயமாக வேலை பார்ப்பாரா?”: நிர்மலா சீதாராமன் திமிர் பேட்டி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், வைகை ஆற்றங்கரை அருகே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அங்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரிய / சமஸ்கிருத / பார்ப்பன

Close