ஜீவா நடிக்கும் புதிய படம் ‘கீ’: மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்!

ஜீவா நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘கீ’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை காலீஸ் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்த அனைகா சோடி நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் பத்மசூர்யா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்ஜே பாலாஜி, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா,  மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஒரே கட்டமாக தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளனர்.

குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இது இந்நிறுவனம் தயாரிக்கும் 10-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – அனீஸ் தருண்குமார்

இசை – விஷால் சந்திரசேகர்

படத்தொகுப்பு – நாகூரன்

கலை – எஸ்.எஸ்.மூர்த்தி .

நடனம் – “பாபா“ பாஸ்கர் .

ஊடகத்தொடர்பு – ரியாஸ் கே.அஹமது.

Read previous post:
0a6e
சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்ற ‘கேமரா மியூசியம்’ திறப்பு விழா!

உலகின் பல இடங்களில் 64-க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்திய பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக

Close