இம்மாதம் வெளியாகிறது விஷாலின் ‘கத்திசண்டை’

தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் (அக்டோபர்) 29ஆம் தேதி வெளியாவதாக இருந்து பின்னர் தள்ளி போடப்பட்ட ‘கத்தி சண்டை’ இம்மாதம் திரைக்கு வருகிறது.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது ‘கத்தி சண்டை’ படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் சுராஜ். அவர் இப்படம் பற்றி கூறுகையில், “ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட்  கலந்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம்.. 50 % காமெடி,  50 % ஆக்ஷன். இதுவரை ஆக்ஷன் கதைகளில் நடித்துவந்த விஷால் இந்த படத்தில் காமெடியிலும், ஆக்ஷனிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.

வடிவேலும், சூரியும் காமெடியில் பின்னி இருகிறார்கள். ‘தலைநகரம்’, ‘மருதமலை’ படங்களுக்குப் பிறகு வடிவேலுவும் நானும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறோம். அதனால் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்பை காண முடிகிறது.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் தனது சிறப்பான இசையால் இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ளார். ‘படிக்காதவன்’ படத்திற்குப் பிறகு தமன்னாவும் நானும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளோம். அவரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு சென்னை, அருப்புக்கோட்டை , ஹைதராபாத், ஜார்ஜியா போன்ற இடங்களில் நடைபெற்றது.  அனைத்துக் கட்ட வேலைகளும் முடிவடைந்து விட்டது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தை தயாரித்துக்கொண்டிருக்கும்  கேமியோ பிலிம்ஸ்C.j.ஜெயகுமார் இந்த படத்தை  இம்மாதம் வெளியிடுகிறார்” என்றார் இயக்குனர் சுராஜ்.

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன்

பாடல்கள் – நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா

வசனம் – பசும்பொன் ஜோதி

எடிட்டிங் – ஆர்.கே.செல்வா

ஸ்டண்ட் – கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ்

கலை – உமேஷ்குமார்

நடனம் – தினேஷ், ஷோபி, ராதிகா

தயாரிப்பு மேற்பார்வை – பிரேம் ஆனந்த்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி