மலேசியாவில் மர்ம கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் 5 பேரின் கதை ‘தண்டனை தூரமில்லை’ 

ரோடு ஷோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எடின் வழங்கும் திரைப்படம் ‘தண்டனை தூரமில்லை’. இத்திரைப்படத்தை படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளார் சதாம் உசேன்.

இதில் எடின் கதாநாயகனாகவும், பிரகதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் நிர்மல், தாமரை செல்வன், சுபாஷ், மணிகண்டன், பிரியங்கா, ஷர்மிளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சதாம் உசேன் கூறுகையில், “வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனைகள்  உள்ள ஐந்து நபர்கள் தங்களின் பிரச்சனைகளை தீர்க்க மலேசியாவிற்கு வேலை தேடி செல்கின்றனர். அங்கே அவர்கள் ஒரு மர்ம கும்பலிடம் மாட்டிக் கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இத்தகைய சூழலிலிருந்து அவர்கள் மீண்டார்களா, இல்லையா என்பதை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் கூறியிருக்கும் திரைப்படம்தான் ‘தண்டனை தூரமில்லை’ என்றார்.

இசை – யஷ்வந்த்

ஒளிப்பதிவு – நரேஷ்

ஊடகத்தொடர்பு – எம்.பி.ஆனந்த்

Read previous post:
0a
இம்மாதம் வெளியாகிறது விஷாலின் ‘கத்திசண்டை’

தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் (அக்டோபர்) 29ஆம் தேதி வெளியாவதாக இருந்து பின்னர் தள்ளி போடப்பட்ட ‘கத்தி சண்டை’ இம்மாதம் திரைக்கு வருகிறது. ஜெயம் ரவி, ஹன்சிகா

Close