கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (டிசம்பர் 15, வியாழன்) இரவு 11.15 மணியளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைப்பாடு காரணமாக கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் டிசம்பர் 7ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவரின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியை காவேரி மருத்துவமனை பணியாளர்கள் அவரது வீட்டிலேயே மேற்கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில் சளித்தொல்லை காரணமாக இன்று (டிசம்பர்15, வியாழன் ) இரவு 11.15 மணி அளவில் அவர் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொண்டை, நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், நோய் தொற்றை குணப்படுத்த மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாகவும்  மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து hindustantimes.com வெளியிட்டுள்ள செய்தி:-

DMK leader M Karunanidhi was readmitted to Kauvery hospital in Chennai on Thursday night after he complained of difficulty breathing.

A medical bulletin issued by the hospital said that the senior leader was suffering from a throat and lung infection, but his condition is stable and treatment has begun to clear the infection. He is being treated by a team of doctors, the hospital added.

The 92-year-old was rushed to the facility from his Gopalapuram residence at around 11:10 pm, about a week after being discharged from the same hospital.

Karunanidhi’s son, MK Stalin, daughter Kanimozhi and senior DMK leader TR Balu were among those visiting the hospital.

A drug-induced allergy has kept Karunanidhi out of public activities for the past one month. The 92-year-old former Tamil Nadu chief minister first underwent treatment at home and later at Kauvery hospital, where he got nutritional and hydration support. He was also treated for boils from his allergy.

His illness comes at a time when Tamil Nadu politics has suffered a leadership vacuum following the death of chief minister J Jayalalithaa at the age of 68. The movie-star-turned politician, who enjoyed a huge following, died at Chennai’s Apollo Hospital on December 6 after a 75-day battle for life.