தேர்தல் குறித்து கமலுடன் பேச பிரகாஷ் காரத் மறுப்பு!

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை டெல்லி சென்றார். அங்கு அவர் கலந்துகொள்ள இருந்த செய்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி இன்று கடைசி நேரத்தில் திடீர் என ரத்தானது. எனினும், தனது டெல்லி பயணத்தை கமல் வீணாக்க விரும்பவில்லை. தன்னுடன் கூட்டுச் சேர ஏதாவது கட்சி கிடைக்குமா என டெல்லியில் வலைவீச முடிவு செய்தார்.

இதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தை கமல் சந்தித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இச்சந்திப்புக்குப் பின்னர், கமல் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கப்போவதாக ஊடகஙகளில் ஒரு வதந்தி பரப்ப்ப்பட்ட்து. திமுக.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நட்த்திவரும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்த வதந்தி சஙகட்த்தை ஏற்பட்டுத்திய்து.

இதையடுத்து, கமல் – பிரகாஷ் காரத் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது:

கமல்ஹாசன் ஏற்கெனவே உள்ள நட்பின் அடிப்படையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்துள்ளார். அப்போது தேர்தல் குறித்து கமல் பேசியுள்ளார்.

அதற்கு பிரகாஷ் காரத், ”இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம். இதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்து விட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்” என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.